திருச்சியில் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் தொடக்கம்
ஒரு நிலையம் ஒரு பொருள் ரயில் நிலையங்களில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் பயணிகளிடமிருந்து ஆர்வமுள்ள பாராட்டை பெற்றுள்ளது.
உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கிலும், அழிந்து வரும் கைவினைப் பொருட்களின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய ரயில்வே இந்த திட்டத்தை ஐந்தாம் கட்டத்தில் ஜூன் 23 முதல் ஜூலை 07-ஆம் தேதி வரை திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
திருப்புவனத்தில் கையால் செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் காட்சிப்படுத்தும் திருபுவனம் பட்டு விற்பனையகத்தை திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் மற்றும ரித்து அகர்வால் திருச்சிராப்பள்ளி தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கையால் செய்யப்பட்ட வர்ணம் பூசப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் காட்சிப்படுத்தும் விற்பனையகத்தினை திருச்சிராப்பள்ளி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் டாக்டர் செந்தில்குமார் திறந்துவைத்தார்.
இந்த ரயில் நிலையங்களில் புகழ்பெற்ற புவிசார் குறியீடு உள்ள தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் திருபுவனம் பட்டு புடவைகள் வாங்கும் வாய்ப்பும் ரயில்வே பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022- 23 யூனியன் பட்ஜெட்டில் ஒரு நிலையும் ஒரு பொருள் திட்டம் அறிவிக்கப்பட்டது இத் திட்டத்தின் நோக்கங்கள் உள்ளூர் /உள்நாட்டு பொருட்களுக்கான சந்தையை அமைத்துக் கொடுத்தல்.
ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் தஞ்சை ரயில் நிலையத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அடுத்தடுத்த கட்டங்களில் 9 ரயில் நிலையங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. முந்தைய கட்டங்களில் தஞ்சையில் உள்ள ஒரு நிலையும் ஒரு பொருள் விற்பனையகம் மூலம் ரூ.3,59,145 மதிப்பிலான கலைப்பொருட்கள் விற்கப்பட்டுள்ளன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO