சாலையை குப்பை கிடங்காக மாற்றி வரும் திருச்சி மாநகராட்சி - பொதுமக்கள் குற்றச்சாட்டு

சாலையை குப்பை கிடங்காக மாற்றி வரும் திருச்சி மாநகராட்சி - பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சி கிராப்பட்டி 3வது கிராஸ் காலனியில் மாநகராட்சி நிர்வாகமே குப்பைகளை கொட்டி ஒரு குப்பை கிடங்காக சாலைகளை மாற்றி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் நேரடியாகவே குப்பைகளை கொண்டு வந்து இங்கேயே கொட்டி செல்கின்றனர். பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டினால் கண்டிக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இன்னும் ஓரிரு வாரங்களில் இவ்விடம் குப்பை கிடங்காக குப்பைகள் அகற்றவிடில் குப்பை கிடங்காக முழுவதுமாக மாறிவிடும்.

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் மாநகராட்சி நிர்வாகம் இப்படி குப்பையை கொட்டி விட்டு செல்கிறது. இதனாலேயே சாலையை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் தயங்குகின்றனர். அதுமட்டுமின்றி இப்படி குப்பைகளை கொட்டும் பகுதிக்கு அருகிலுள்ள இடம் புதர்போல் செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்து வருகின்றன.

இவை அப்பகுதியில் அதிக நோய் ஏற்படுவதற்கு காரணியாக அமைகின்றது. இந்த குடியிருப்பு பகுதியில் அதிக எண்ணிக்கையில் முதியவர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காவது மாநகராட்சி நிர்வாகம் இதனை அப்புறப்படுத்த வேண்டும்.

இதே போன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பிரதான சாலையில் தபால் நிலையம் எதிரில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதில் உணவு கழிவுகள்,   பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு கொட்டப்படுகிறது. மேலும் கால்நடைகள் இங்கு எப்பொழுது குப்பைகளை திண்பதற்காக நிற்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த பிரதான சாலையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY