கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நீதிமன்ற பிணை உத்திரவை மீறிய எதிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நீதிமன்ற பிணை உத்திரவை மீறிய எதிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

திருச்சி பொன்மலை காவல் நிலைய த்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பொன்மலை காவல் நிலைய சரித்திர பதிவேடு எதிரியான பரமசிவம் தெரு, திருச்சி மேலக்கல்கண்டார்கோட்டை, பரமசிவம் தெருவைச் சேர்ந்த இளவரசன் (வயது 30) என்பவரை கைது செய்து 15:03.22-ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேற்படி எதிரி இளவரசன் மீது 2012ம் ஆண்டு பொன்மலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனை பிணையில் வெளியில் வந்தர், நீதியன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத காரணத்தினால் ஜாமீனில் வெளியில் வராத பிடிகட்டளை (NBW) பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் விதித்த நிபத்தனையை மீறிய குற்றத்திற்காக எதிரி மீது அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் இருந்தது.

மேலும் இளவரசன் மீது பொன்மலை காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் பொன்மலை காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்த நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக பொன்மலை காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்தது. மேற்படி எதிரி இளவரசன் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதால், அவர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக பொன்மலை காவல் நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி எதிரியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்து ஒரு வருட காலத்திற்கு நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மேற்படி எதிரி இளவரசன் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி மீண்டும் குற்றசெயலில் ஈடுபட்டதால் அவர் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 73 நாட்களும் சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொலை வழக்கில் நிபந்தனை பிணையை மீறியதற்காகவும், பிரமாண பத்திரத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டதற்காகவும் மேற்படி எதிரி இளவரசன் என்பவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர், மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO