தவெக கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாள் நினைவு நாள் - மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய தவெகவினர்

தவெக கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாள் நினைவு நாள் - மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய தவெகவினர்

தமிழ்நாட்டைச் சார்ந்த விடுதலைப் போராட்ட தியாகியும் , தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான அஞ்சலை அம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவராக உள்ளார் 

அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது அதனை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் தமிழக முழுவதும் அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

அதேபோல திருச்சி தெற்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதி சார்பாக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும், தெற்கு மாவட்ட தலைவர் கரிகாலன் தலைமையில் , பகுதி செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் ஏற்பாட்டில் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ஏர்போர்ட் பகுதி செயளாலர் செந்தமிழ் , மார்கெட் பகுதி செயலாளர் கௌதமன், அரியமங்கலம் மூர்த்தி, PRD ராமச்சந்திரன் , கோவில் சீனி, EB ROAD சக்திவேல், பாலக்கரை பகுதி செயளாலர் மாசி, சத்யராஜ், அரியமங்கலம் நாகேந்திரன், சதீஷ் , மகளிர் அணி ஶ்ரீ ரம்யா, கார்த்திகா, சகனாஜ், தீபா மணி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision