திருச்சி சங்கீதாஸில் நிறுத்திய கார் திடீரென மாயம் சிறிது நேரத்தில் ஜி கார்னர் பகுதியில் நின்றதால் அதிர்ச்சி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள (சங்கீதாஸ்) தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று உணவருந்தி விட்டு வந்து பார்க்கும் பொழுது கார் காணாமல் போய்விடுகிறது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சிறிது நேரத்தில் திருச்சி ஜி.கார்னர் பகுதியில் அந்த கார் தனியாக நின்று கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. யார் இந்த காரை எடுத்துச் சென்றார்கள் ஏன் இங்கே விட்டு சென்றார்கள் என்பது குறித்து தடவியல் நிபுணர்களை வைத்து காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி ஊழியர் இவர் குடும்பத்துடன்
கரூர் பரமத்தி வேலூருக்கு சென்று கொண்டிருந்த பொழுது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது முககவசம் அணிந்த ஒரு நபர் காரை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. காரைப்பூட்டி சாவியை இவர்கள் கையில் வைத்திருக்கும் பொழுது தெரியாத நபர் ஒருவர் எப்படி காரை எடுத்துச் செல்ல முடிந்தது என்பதை காரின் உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision