திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து வரிகளையும் UPI செயலிகள் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து வரிகளையும் UPI செயலிகள் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதை உபயோகப்படுத்த பொது மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் கோரிக்கை.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், புதைவடிகால் சேவைக் கட்டணம், வரி மற்றும் வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரி தொகைகளையும் Google pay, Paytm, PhonePe ஆகிய செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு அர்பன் இசேவை முனிசிபல் டேக்ஸ் (Tamil Nadu Urban eSevai Municipal Tax) எளிய முறையில் வரிகளை செலுத்திட பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, அனைத்து வார்டுகுழு அலுவலகங்களில் அமைந்துள்ள வரி வசூல் மையங்களிலும் நேரிலும் வரிகளை செலுத்தலாம் எனவும், வரித்தொகைகளை உரிய காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆணையர்:
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision