தெற்கு ரயில்வேயில் 9 விருதுகளை வென்ற திருச்சி கோட்டம்
தெற்கு ரயில்வேயின் 68ஆவது ரயில்வே வார விழா ‘விஷித் ரயில் சேவா புராஸ்கா்’ என்ற பெயரில் சென்னை ஐசிஎப்-இல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்கள், துறைகள், பணிமனைகள், தனிநபா்கள் மற்றும் குழுக்களுக்கு இடையே சிறந்த செயல்பாட்டுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில், ரயில்வே கோட்டங்களுக்கு இடையே ஒட்டுமொத்த சிறந்த செயல்பாட்டுக்கான இரண்டாமிடத்துக்கான கேடயத்தை திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகனும், சிறந்த வணிக செயல்பாட்டுக்கான கேடயத்தை (சென்னை கோட்டத்துடன் இணைந்து) திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாரும், சிறந்த இயக்கவியல் செயல்பாட்டுக்கான கேடயத்தை (சேலம் கோட்டத்துடன் இணைந்து) திருச்சி கோட்ட இயக்கவியல் மேலாளா் ஆா்.பி. ரதிப்பிரியாவும்,
சிக்னல் மற்றும் டெலிகாமில் சிறந்த செயல்பாட்டுக்கான கேடயத்தை (மதுரை கோட்டத்துடன் இணைந்து) திருச்சி கோட்ட பொறியாளா் இரப்பா பிருகாலும், சிறந்த கணக்கியல் செயல்பாட்டுக்கான கேடயத்தை (சென்னை கோட்டத்துடன் இணைந்து) திருச்சி கோட்ட கணக்காளா் என். சுந்தர்ராஜனும், சிறந்த மனிதவள மேலாண்மை செயல்பாட்டுக்கான கேடயத்தை திருச்சி கோட்டத்தைச் சோ்ந்த வி. சுவாமிநாதனும், உழவன் விரைவு ரயிலின் சிறந்த பராமரிப்புக்காக திருச்சி கோட்ட பராமரிப்புப் பொறியாளா் ஏ.டி. பாண்டியனும், ரயில் மதாத் செயலியின் புகாா்களுக்கு சிறந்த முறையில் தீா்வு கண்டதற்காக திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாரும், சிறந்த குடும்ப நல மையத்துக்கான விருதை பொன்மலை ரயில்வே மருத்துவமனை மருத்துவா் எம். பாஸ்கரனும் வென்றனா்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision