ஆய்வுக்கட்டுரையை சமர்பித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு வறுமை ஒழிப்பு மட்டும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் (07.02.2024) அன்று திருச்சி தேசியக் கல்லூரியில் International Congress On Renaissance in Sports எனும் விளையாட்டுத் துறை சார்பான பன்னாட்டுக் கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்தார்.
உலகின் 50 நாடுகளின் இருந்து விளையாட்டுத் துறை சார்பான வல்லுநர்கள் இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த தொடர் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையை சமர்பித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக “PHYSICAL ACTIVITIES FOR SKILLS DEVELOPMENT AMONG SCHOOL CHILDREN USING MACHINE LEARNING TECHNOLOGY” தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
அதன் ஆய்வுக் கட்டுரையை ICRS எனும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் சமர்பித்து பேராசிரியர்களும், வல்லுநர்களும் எழுப்பிய சந்தேகங்களுக்கு விடையளித்தார். இந்நிகழ்வில் தேசியக் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision