திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை தயாரிப்பு பணி தீவிரம்

திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை தயாரிப்பு பணி தீவிரம்

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பின்புறம் கல்லுகுழி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. திருச்சியில் உள்ள முக்கிய கோயில்களில் இக்கோயிலும் இடம்  பெற்றுள்ளது. இக்கோயிலில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாட உள்ளது. அப்போது ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்டு மாலை சாத்தப்படும். இதே போல 10 ஆயிரம் ஜாங்கிரி கொண்ட மாலையும் சாத்தப்படும்.

இந்த வடை, மற்றும் ஜாங்கிரி  தயாரிக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 800 கிலோ உளுந்து, 80 டின் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இப்பணியில் 150க்கும் மேற்பட்ட பெண்களும், சமையல் கலைஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

சமையல் கலைஞர்களால் சுட்டெடுக்கப்பட்ட வடை மற்றும் ஜாங்கிரியை மாலையாக கோர்க்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். இன்று இரவு முடிவடையும் இந்த பணிக்கு பிறகு ஆஞ்சநேயருக்கு நாளை காலை இந்த வடை மற்றும் ஜாங்கிரி மாலை சாத்தப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn