அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்க உள்ளேன் - திருச்சியில் அமைச்சர் உதயநிதி பேட்டி

அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்க உள்ளேன் - திருச்சியில் அமைச்சர் உதயநிதி பேட்டி

தமிழ்நாடு இளைஞர் நலம் மட்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் திருச்சியில் இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டார். நேற்று காட்டூர் பகுதியில் உள்ள பள்ளியில் அறிவியல் அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள சூரியூரில் பகுதியில் ஒலிம்பிக் ஸ்டேடியம் கட்டுவதற்கான இடங்களையும், பின்னர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் திருச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை பார்வையிட்டார். இன்று காலை திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள பறவை பூங்காவை பார்வையிட்ட பின்னர் அல்லூரில் தனியார் பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலையில் பழங்குடியின குண்டு உறைவிட பள்ளியில் படித்து என்ஐடியில் பயில வாய்ப்பு கிடைத்த பழங்குடியின மாணவியை நேரில் சென்று பாராட்டினார். அதன் பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..... கடந்த 2 நாட்களாக பல்வேறு பணிகள் ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் வேகமாக செய்ய உத்தரவிட்டேன். அனைத்து நலத்திட்டங்களும் எல்லோருக்கும் சென்றடைகிறது. இங்கு நடைபெற்ற ஆய்வு கூட்டங்கள் தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்க உள்ளேன் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision