எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கட்டாயப்படுத்தி காலி செய்ய கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி அரசு நிலத்தில் 30 ஆண்டு கால குத்தகைக்கு எடுக்கப்பட்டு விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் உணவகம் நீச்சல் குளம், பார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் வசதிகளும் உள்ளன. இங்கு விருந்தினர்கள் தங்குவது மட்டுமின்றி திருமணம் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குறிப்பாக 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த விடுதிக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வாடகை ஆரம்ப காலத்தில் செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக வாடகை செலுத்தாமல் எஸ் ஆர் எம் விடுதி நிர்வாகம் 30 கோடி பாக்கி வைத்துள்ளது. பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் நெருக்கடியால் 12 கோடி ரூபாய் வாடகை மட்டும் செலுத்தியுள்ளனர். 30 ஆண்டுகள் அரசு நிலத்தை குத்தகை எடுத்து அதில் தங்கும் விடுதி நடத்தி வந்த எஸ் ஆர் எம் நிர்வாகத்தின் குத்தகை காலம் (14.06.2024) நிறைவடைந்து விட்டது.
இதனால் வாடகை பாக்கி கட்ட மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், விடுதி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஹோட்டல் நிர்வாகம் சார்பில் பல்வேறு வாதங்கள் மற்றும் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கட்டாயப்படுத்தி காலி செய்யும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision