மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கோடை விடுமுறை முடிந்து தமிழகமெங்கும் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறை வகுப்பறைகளையும் பள்ளியையும் தூய்மை செய்து பள்ளி திறப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாவட்டத்தில் கூத்தூரில் உள்ள விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வருவாய் லால்குடி கோட்டாட்சியர்  சிவசுப்பிரமணியன், வட்டாரப் போக்குவரத்து

அலுவலர்கள்  சுரேஷ் பாபு, தா. நடராஜன்,போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் சா.செந்தில்குமார்,சு.செந்தில், பா.அருண்குமார் அ.முகமது மீரான்,தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் உதவியாளர்கள் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision