உலக டவுன் சின்ட்ரோம் தினம் – திருச்சியில் சிறப்பாக கொண்டாட்டம்

உலக டவுன் சின்ட்ரோம் தினம் – திருச்சியில் சிறப்பாக கொண்டாட்டம்

உலக டவுன் சின்ட்ரோம் தினம் – திருச்சியில் சிறப்பாக கொண்டாட்டம்

இந்திய குழந்தை நல குழுமம்- திருச்சி கிளை, மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை (குழந்தை நலப் பிரிவு), மற்றும் மாவட்ட தொடக்க இடையிட்டு மையம் இணைந்து இன்று உலக டவுன் சின்ட்ரோம் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.

டவுன் சின்ட்ரோம் என்றால் என்ன?              டவுன் சின்ட்ரோம் என்பது மரபணு மாற்றத்தினால் ஏற்படும் நிலை. இது ஒரு குழந்தைக்கு கூடுதல் ஒரு குரோமோசோம் 21 ஆவது கியோமோசோமுடன் இருப்பதன் விளைவாக ஏற்படுகிறது. இந்த நிலையால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, கற்றல் திறன், மற்றும் அறிவாற்றலில் மாற்றங்கள் ஏற்படலாம். இருப்பினும், தன்னம்பிக்கை, உரிய ஆதரவு, மற்றும் விழிப்புணர்வின் மூலம், டவுன் சின்ட்ரோம் கொண்ட குழந்தைகள் வாழ்க்கையில் பெரும் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

நிகழ்வின் சிறப்புகள்இந்த நிகழ்வில், டவுன் சின்ட்ரோம் உள்ள குழந்தைகள், அவர்கள் பெற்றோர்கள், மருத்துவம் பயிலும் மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர். டவுன் சின்ட்ரோம் இருப்பினும், தன்னம்பிக்கையுடன் பல சாதனைகளைப் புரிந்த நால்வரை எடுத்துக்காட்டாக முன்னிறுத்தி, அவர்களின் சாதனைகளை பட்டியலிட்டு, திறமைகளை அரங்கேற்றி, மரபணு பிரச்சனை ஒரு குறையல்ல, எதையும் சாதிக்கும் வலிமை அனைவருக்கும் உள்ளது என்பதை உணரவைத்தனர்.

இந்நிகழ்வில், டவுன் சின்ட்ரோம் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பதன் அடையாளமாக அனைவரும் மஞ்சள் மற்றும் நீலம் நிற உடைகளை அணிந்து, அதே நிற பேட்ஜ் மூலம் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.நிகழ்வின் சிறப்பு அம்சமாக, தலைமை தாங்கிய டீன் மருத்துவர் குமாரவேல், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் உதய அருணா, துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அருண் ராஜ் குழந்தை நல துறை தலைவர் மருத்துவர் சுரேஷ் குமார் உள்ளிட்ட அனைவரும் ஆதரவின் அடையாளமாக அதே நிற உடையில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு, டவுன் சின்ட்ரோம் குறித்த விழிப்புணர்வையும், இக்குழந்தைகளுக்கு தகுந்த ஊக்கம் கொடுத்தால் எவருக்கும் சாதிக்கலாம் என்ற உணர்வையும் உருவாக்கிய சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்தது.இந்த நிகழ்வை இந்திய குழந்தை நல குழுமம், திருச்சி கிளை சார்பில் அதன் தலைவர்: டாக்டர் சதீஷ்குமார், செயலாளர்: டாக்டர் பத்மபிரியா, பொருளாளர்: டாக்டர் கார்த்திகேயன் மற்றும் உதவி பேராசிரியர்: டாக்டர் கீதாஞ்சலி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision