கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு காணொளி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (21.03.2025 )தலைமை செயலகத்திலிருந்து பள்ளி கல்வித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டின் உலக தரத்துடன் கட்டப்பட உள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்திற்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
காவேரி கரையில் அமைந்த திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும் இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி தமிழ்நாட்டை நெற்களஞ்சிய பகுதியில் ஓர் அறிவுக்களஞ்சியமாக அமைந்திடும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (27.06. 2024) அன்று சட்டமன்ற பேரவையில் விதி எண் 110 கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகரில் ஒரு கோடியே 97 லட்சத்து 337 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளம் நூலக கட்டிடம் 235 கோடி மதிப்பீட்டிலும் புத்தகங்கள் மற்றும் இ- புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக தரத்துடன் அமைக்கப்பட உள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நூலகத்தின் தரைத்தளத்தில் வரவேற்பறை,தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி,பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை ,சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி,பருவ இதழ்கள், பத்திரிக்கை அறை,நூலகர் மற்றும் தகவல் அலுவலர் காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி,மற்றும் ஆயிரம் இருக்கைகள் கொண்ட கலையரங்கம், உள்ளிட்ட வசதிகளுடனும்
முதல் தளத்தில் அறிவியல் மையம்,சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம்,குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம், மற்றும் பாட புத்தகங்கள் பகுதி,ஆகிய வசதிகளுடன் இரண்டாம் தளத்தில் கலைஞர் பகுதி ஆராய்ச்சி மையம் பயிலரங்கம் மற்றும் பல்நோக்கு கூட ஆகிய வசதிகளுடனும் மூன்றாம் தளத்தில் தமிழ் நூல் குறிப்பு பகுதி தமிழ் நூலகம் படைப்பாளர் பகுதி தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி ஆகிய வசதியுடனும் நான்காம் தளத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி இணைய நூலகம் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி எனவும் ஐந்தாம் தளத்தில் அறிவுசார் மையம் செயற்கை நுண்ணறிவு ஆராய்வு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி உள்ளிட்ட வசதிகளுடனும் ஆறாம் தளத்தில் நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வரை பார்வை குறைபாடுடைய பகுதி டிஜிட்டல் ஸ்டுடியோ போட்டு தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்க கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ஏழாம் தளத்தில் காணொளி வீடியோ கான்பிரசிங் காட்சி அரங்கம் தலைமை நூலக நூல் அலுவலர் அறை துணை தலைமை நூலக அலுவலர் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அவை நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட உள்ளது
மேலும் நகரும் படிக்கட்டுகள் இரண்டு கண்ணாடி மின் தூக்கிகள், ஏழு மின்தூக்கிகள், தீயணைப்பு வசதிகள் அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள்,மின்மாற்றிகள் சூரிய மின்கலங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
இந்நூலகத்தில் உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இலக்கணம், கலை,கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுமையாக்கப்பட்ட நூல்கள், தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், மற்றும் திராவிட த தலைவர்களின் நூல்கள்,பெண்ணியம்,தேசிய இயக்க தலைவர் நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம்,பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம், போன்ற பல துறைச் சார்ந்த நூல்கள், போட்டி தேர்வு மாணவர்களுக்கான நூல்கள், ஆகியவை இடம்பெற உள்ளன.
சென்னையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு கே.என் நேரு அவர்கள் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ வவேலு அவர்கள்,மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்,திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு இனிகோ இருதயராஜ் அவர்கள்,தலைமை செயலாளர் திரு. நா.முருகானந்தம் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி. சந்திரமோகன் அவர்கள், பொதுப்பணித்துறை செயலாளர் திரு ஜெ. ஜெயகாந்தன் அவர்கள்,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பொது நூலக இயக்குனர் முனைவர் பொ.சங்கர் அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமா.பிரதீப் குமார் அவர்கள்,மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு சரவணன் அவர்கள் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் திரு செந்தில்,கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், திரு அருள், மாவட்ட நூலக அலுவலர் திரு ரா. சரவணகுமார், பொதுப்பணி செயற்பணியாளர் திருமதி பி.அன்பரசி, கட்டிடங்கள் திரு.நா.கண்ணன்,மின்சாரம் உதவி செயற்பொறியாளர் திரு.வெங்கடேசன் கட்டிடங்கள் திரு பாலமுருகன், மின்சாரம் அரசு அலுவலர்கள் வாசகர் வட்ட தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.