நான்கு வயது குழந்தை மரணத்திற்கு காரணம் மாநகராட்சி குடிநீரா?

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிக்கையை சமர்பிக்கிறேன்.
இப்பகுதியில் பிரியங்கா என்ற 4 வயது பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை சுயநினைவின்றி காணப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். அக்குழந்தைக்கு அடிக்கடி வயிற்று தொற்று ஏற்பட்டு ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை வழங்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு குழந்தை இறப்பு நிகழந்துள்ளதாக. விசாரணையில் தெரிய வருகிறது... முதற்கட்ட
மேலும் இப்பகுதியில் உள்ளுர் கோவில் திருவிழாக்கள் தொடர்ந்து ஒரு மாதமாக நடைபெற்று வந்ததினால் அதிகமான மக்கள் அப்பகுதியில் கூடியதாலும் அன்னதானம் நிகழ்ச்சி நிறைய நடைபெற்றது. அதனால் வழங்கப்பட்ட உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தற்காலிகமாக மாநகராட்சி குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது
மேலும் இப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அல்லாத பகுதிகளை சேர்ந்த பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால்
திருவிழாக்களில் வழங்கப்பட்ட அன்னதான உணவுகள் காரணமாக இருக்கலாம். எனவே மாநகராட்சி பகுதிகளில் வயிற்று போக்குக்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மாநகராட்சி மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஆணையாளர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision