14 ஊராட்சிகளில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல்கட்டமாக 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் கீழ்கண்டவாறு ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் நீர்நிலைகள், புறம்போக்கு பகுதிகள் மற்றும் தனியார் இடங்களில் பரவியுள்ள சீமைக்கருவேல் மரங்களை முழுமையாக அகற்றிட வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படவேண்டிய முதற்கட்ட ஊராட்சிகளின் விபரம் :
ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் :
1.அந்தநல்லூர் - பேரூர்
2.மணிகண்டம் - மாத்தூர்
3. திருவெறும்பூர் - காந்தலூர்
4. மணப்பாறை - வடுகப்பட்டி
5. மருங்காபுரி - தாதனூர்
6. வையம்பட்டி - இனாம்பொன்னம்பலம்பட்டி
7. இலால்குடி - ஆங்கரை
8. மண்ணச்சநல்லூர் - வலையூர்
9. புள்ளம்பாடி - நம்புக்குறிச்சி
10. முசிறி - காமாட்சிப்பட்டி
11. தொட்டியம் - நாகையநல்லூர்
12. தா.பேட்டை - கோணப்பம்பட்டி
13. துறையூர் - சொக்கநாதபுரம்
14. உப்பிலியபுரம் - இ.பாதர்பேட்டை
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டுவருகிறது. மேலும், அவை வளராமல் அவர்கள் தடுக்க மரக்கன்றுகள் நடும்பணி தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு அகற்றப்பட்ட சீமைகருவேல மரங்கள் மீண்டும் வளராமல் தடுக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிறந்த பலன்தரும் மரவகைகள் நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் சீமைக்கருவேல் மரங்கள் முழுமையாக அகற்றப்படும் ஆட்சித்தலைவர் என மாவட்ட மா.பிரதீப்குமார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision