போலி திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுத்த வாலிபர் கைது.

போலி திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுத்த வாலிபர் கைது.

புதுக்கோட்டை மாவட்டம் வத்தனக்கோட்டையை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் திருவேங்கைநாதன் (32). பட்டதாரியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு திருமண தகவல் மையம் மூலம் மணப்பெண் வேண்டி பதிவு செய்திருந்தார். திருமண தகவல் மையம் மூலம் கிடைத்த தகவல் மூலம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பெண் கேட்டுள்ளார்.

இவருக்கு பெண் கொடுக்க பெண் குடும்பத்தார் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருவேங்கைநாதன் திருமண தகவல் மையத்தில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக திருமண பத்திரிக்கை அடித்து இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். இதுப்பற்றி அறிந்த பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து பெண் வீட்டார் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவேங்கைநாதனை தேடி வந்தனர். இந்நிலையில் சொந்த ஊரான வத்தனக்கோட்டையில் உள்ள வீட்டில் இருந்த வேங்கைநாதனை 3 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision