திமுக - காங்கிரஸில் விரிசல் ஏற்படுவதை விரும்பவில்லை திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி

திமுக - காங்கிரஸில் விரிசல் ஏற்படுவதை விரும்பவில்லை திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு பலரும் ஆதரவும், காங்கிரஸ் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்படி திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் வாயில் வெள்ளை துணியை கட்டியபடி நூதன முறையில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பைத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்.... ராஜீவ் கொலையில் பேரறிவாளன் குற்றமற்றவர், நிரபராதி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை, ஏற்கனவே தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றம் தற்போது தன அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது, இது தர்மத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது என்பது தவறான முன்னுதாரணத்தை வழிவகுக்கும், பல்வேறு வழக்குகளில் தமிழக சிறையில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் பலர் சிறையில் உள்ளனர். கருணை அடிப்படையில் என்று விடுதலை செய்ய வேண்டும் என்றால் அனைத்து சிறைக் கதவுகளை திறந்து விடுவதை தவிர வேறு வழியில்லை.

ஒரு சில அரசியல் இயக்கங்கள் இதனை வரவேற்று இருந்தாலும் பொதுவான மக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் இந்த விடுதலை எதிர்க்கின்றனர். பேரறிவாளன் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவது என்பது ஏற்கத்தக்கதல்ல, பேரறிவாளன் ஒன்றும் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் தியாகியாக உள்ளே சென்று வெளிவரவில்லை.

இதனால் ராஜுவ் மரணத்தின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் பலரும் வருத்தம் அடைய செய்வதாக உள்ளது. மற்ற ஐந்து பேர் விடுதலை செய்வது மத்திய மாநில அரசுகள் இதனை எவ்வாறு கையாளப் போகிறது என்பதைப் பொறுத்து உங்களது கருத்தை சொல்வோம்.

ஸ்டாலின் பேரறிவாளனை கட்டித்தழுவி வரவேற்றது குறித்து கருத்து தெரிவித்து அதன் மூலம் திமுக - காங்கிரஸில் விரிசல் ஏற்படுவதை விரும்பவில்லை என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO