குடிபோதையில் இருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

குடிபோதையில் இருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

 குடும்ப பிரச்சனை காரணமாக குடிபோதையில் இருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பெண்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 03.03.2019ந்தேதி இரவு 7.00 மணியளவில் அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அம்பிகாபுரம் VOC தெருவில், தனது நண்பரின் வீட்டின் முன்பு பேசிக்கொண்டிருந்த ஒருவரை குடும்ப பிரச்சனை காரணமாக அசிங்கமாக திட்டியும், கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியும், தடுக்க சென்ற நண்பரையும் கத்தியால் குத்தி, கொலை செய்ய முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு எதிரி பாஸ்கர் வயது 29  என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து எதிரி பாஸ்கர் வயது 29 த.பெ.ராஜேந்திரன் மீது கடந்த 07.04.2019-ந்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி முதன்மை குற்றவியல் நீதிதுறை நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி சாந்தி MA.,LLM.,  விசாரணையை முடித்து 19.05.22-ம்தேதி, எதிரிக்கு ச/பி 326 இதச-ன்படி 5 வருட சிறை தண்டனையும், ச/பி 307 இதச-ன்படி 10 வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கி, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவு பிறப்பித்தார்கள். இவ்வழக்கில் ADPP ஹேமந்த் MA.,BL அவர்கள் ஆஜரானார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த அரியமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp


#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO