திருச்சி காவலர்கள் மீது தாக்குதல் - ஒன்னறை பவுன் செயின் பறிப்பு

திருச்சி காவலர்கள் மீது தாக்குதல் - ஒன்னறை பவுன் செயின் பறிப்பு

திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவில் காவலர்களாக உள்ளவர்கள் சத்யராஜ், ரசூல் இருவரும் ரோந்து பணியில் இருக்கும் போது ராம்ஜிநகர் அல்லித்துறை சாலையில் ஏழுமலை, திருமலை இருவரும் கஞ்சா வாங்க வந்துள்ளதாக விசாரணையில் தெரிந்து அவர்களை பிடித்துள்ளனர்.

பொதுமக்கள் அங்கே கூடி நீங்கள் காவலர்களா என்று கேட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்த பொழுது சத்யராஜ் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் செயின் பறிக்கப்பட்டுள்ளது. பின்னர் சோமரசன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து இரண்டு காவலர்களையும் மீட்டு சென்றனர்.

பின்னர் சோமரசன்பேட்டை காவலர்கள் அங்கு விசாரணை நடத்தினர். ஆனால் மதுவிலக்கு பிரிவு காவலர் அணிந்திருந்த செயின் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவை சேர்ந்த இரண்டு காவலர்களும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை நடத்திய சம்பவத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் மதுவிலக்கு பிரிவு காவலர்களை தாக்கிய பொதுமக்களில் காவலர் அணிந்திருந்த ஒன்னறை பவுன் செயினை பறித்த (18 வயதுக்கு உட்பட்டவர்கள்) இருவரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் இல்லத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision