திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் - நிர்வாக இயக்குநர் ஆய்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பொங்கல் விடுமுறையை முன்னிட்டு (10.01.2025) முதல் (19.01.2025) வரை பொதுமக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்கும் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் பயணிகள் தடையின்றி பயணம் செய்ய எதுவாக இயக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு பேருந்துகள் மூலம் பயணிகள் தடையின்றி செல்ல சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்வதற்கு 24 கொடுக்கப்பட்டுள்ளது. மணி நேரமும் இணைப்பு பேருந்து வசதியும் செய்து மேற்கண்டுள்ள இயக்கப்பகுதிகளில் இரவு மற்றும் பகல் 24 மணி நேரமும் பேருந்து நிலையங்களில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒலி பெருக்கி மூலமாகவும், பேனர்கள் மூலமாகவும் முன்பதிவு பயணிகளுக்கு Digital Display Board மூலமாகவும் பயணிகளுக்கு தகவல் உதவி வழங்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. (10.01.2025) முதல் (13.01.2025) வரை பொங்கல் பண்டிகைக்கு முன்பு 1758 சிறப்பு பேருந்து புறப்பாடுகள் ஏற்பாடு செய்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.(14.01.2025) முதல் (19.01.2025) வரை பொங்கல் பண்டிகை முடிந்து அவரவர்கள் இருப்பிடத்திற்கு திரும்ப செல்வதற்கு வசதியாக 1978 சிறப்பு பேருந்து புறப்பாடுகள் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
இப்பேருந்துகளில் பயணிகள் எவ்வித சிரமமின்றி பயணம் செய்து பயனடைந்துள்ளனர். மேலும் பொங்கல் விடுமுறையின் கடைசி நாளான (19.01.2025) அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் மற்றும் நள்ளிரவு 12:30 மணி வரை சென்னை மற்றும் மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு 220-க்கும் அதிகமான சிறப்பு பேருந்து புறப்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னைக்கு கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் தனியாக பயணம் செய்யும் மகளிர் பயணிகளின் நலன் கருதி மகளிர் மட்டும் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகளும் இயக்கம் செய்யப்பட்டது.
இப்பேருந்துகளில் மகளிர் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார்கள். குறிப்பாக திருப்பூருக்கு 299 புறப்பாடுகளும், கோயம்புத்தூருக்கு 343 புறப்பாடுகளும் ஆக மொத்தம் 642 சிறப்பு பேருந்து புறப்பாடுகள். (19.01.2025) அன்று காலை முதல் அதிகாலை 1:30 மணிக்குள்ளாக திருப்பூருக்கு 124 புறப்பாடுகளும், கோயம்புத்தூருக்கு 133 புறப்பாடுகளும் சகோதரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து பேருந்துகள் ஏற்பாடு செய்து பயணிகள் வசதியாக பயணம் செய்ய போதுமான பேருந்துகள் சிறப்பாக இயக்கம் செய்யப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision