மலைத் தேனீக்கள் கொட்டியதில் 40க்கும் மேற்பட்டோர் காயம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரில் உள்ளது புனித சவேரியார் கோவில். இக்கோயிலில் சப்பரத் தேர்த்திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை மற்றும் பொதுமக்கள் சப்பரத் திருவிழாவிற்க்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் சப்பர தேர்த் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள வனத்து சின்னப்பர் ஆலயத்திற்கு வழிபாடு செய்வதற்காக ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியில் இருந்த ஆலமரத்தில் இருந்த மலை தேனீக்கள் பொதுமக்களை கொட்டியது. இதில் 40-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மலைத் தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனை க்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மலை தேனீக்கள் கொட்டியதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision