இணையவழியில் ஜமால் முகம்மது கல்லூரியின் 70ஆம் ஆண்டு நிறுவனர் நாள் விழா

இணையவழியில் ஜமால் முகம்மது கல்லூரியின் 70ஆம் ஆண்டு நிறுவனர் நாள் விழா

இணையவழியில் நடைப்பெற்ற ஜமால் முஹம்மது கல்லூரியின் 70ஆம் ஆண்டு நிறுவனர் நாள் விழா:திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள கல்லூரிகளில் புகழ்மிக்க கல்லூரிகளில்ஜமால் முஹம்மது கல்லூரியும்ஒன்றாகும். 
இக்கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலைக் கல்வி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய இக்கல்லூரி 1982 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதன்கீழ் இணைக்கப்பட்டது.


ஜமால் முஹம்மது கல்லூரி 1951ஆம் ஆண்டு 60 ஏக்கர் பரப்பளவில் திருச்சியில் நிறுவப்பட்டது. உருவாக்கப்பட்டபோது இது சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இக்கல்லூரி 1982 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதனோடு இணைக்கப்பட்டது.கல்லூரி தொடங்கப்பட்டு 70ஆம் ஆண்டு நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு இன்றைக்கு(ஜூலை ஞாயிற்றுக்கிழமை )  இணையவழியில்  சிறப்பு நிகவ்வு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
 நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்  கல்லூரியின் தமிழாய்வுத் துறை இணைப் பேராசிரியர் முகமது இஸ்மாயில் கூறுகையில், 

இக்கல்லூரி 1951 ஆம் ஆண்டு சூலை 11ம் நாள் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சாரான மேதகு பி. எஸ். குமாரசுவாமிராஜா அவர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது சென்னை பல்கலைகழகத்தின் கீழும் 1982ல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டபோது அதன் கீழும் உறுப்பு கல்லூரியாக இயங்கி வருகின்றது.தென்னிந்தியாவின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என புகழப்படும் இக்கல்லூரி தமிழக இசுலாமிய மக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு மையமாகவும் கருதப்படுகிறது.ஜனாப் எம். ஜமால் முஹம்மது சாகிப் மற்றும் என். எம் காஜா மியான் இராவுத்தர் ஆகியோர் இதனை நிறுவியவர்களாவர்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட சேவை புரிந்தமைக்காக இந்திராகாந்தி தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தேசிய விருது 2015 நவம்பர்19-ந் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆல் வழங்கப்ட்டது.கல்லூரி தொடங்கப்பட்ட நிறுவனர் நாளை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும்   ஜூலை 11 அன்று நிறுவனர் தினமானது வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த. கொரானா காலகட்டத்தில் இந்நிகழ்வு இணையவழியில் ஒருங்கிணைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக 
 தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர்,பேராசிரியர் அருண் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை உரை
கல்லூரியின் முதல்வர்
 முனைவர் எஸ் இஸ்மாயில்  வழங்கினார்.  நிகழ்விற்கு கல்லூரியின் தலைவர் செயலாளர் உட்பட அனைவரும் முன்னிலை வகித்தனர்.சிறப்புரையாற்றிய பேராசிரியர் அருணன் அவர்கள் பேசுகையில்,இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எல்லோருக்குமே எதிர்காலம் ஆனது  சிறந்ததாக அமையும் என்பதற்கு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

இன்றைக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை  அமைச்சராக இருக்கும்  கே.என் நேரு, சட்டமன்ற உறுப்பினர் எல்.கனேசன், முன்னாள் மக்களவை   உறுப்பினர் அப்துல் ரகுமான்,   தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும்  வசந்தன்  வசந்த் போன்ற பிரபலங்கள் கல்லூரியில் படித்தவர்கள்தான் இவர்களைப் போன்று இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் அவர்களுடைய வாழ்வில்  சாதிக்க  இக்கல்லூரி அவர்களுக்கு உறுதுணையாய் செயல்படுகிறது என்றும் சிறப்பித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a