பிஜேபி மாவட்ட துணைத் தலைவர் விலகல் - விசுவாசத்திற்கும், உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை குற்றச்சாட்டு
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜெயகர்ணா. தொழிலதிபரான இவர், கட்சியிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளார். பிஜேபி தலைமைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்......
எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேலை பளுவின் காரணமாகவும், தொடர்ந்து கட்சியில் பணியாற்ற முடியாத காரணத்தால் (03.08.2024) முதல் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், திருச்சி மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்தும் நான் முழுமையாக விலகிக் கொள்கிறேன்.
இன்று முதல் எனக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த காரணங்களுக்காக பதவி விலகினால் கூட, விலகும் இந்நேரத்தில் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் சரியான அங்கீகாரம் பாஜகவில் கிடைக்கவில்லை என்ற உணர்வுடன் பிரிந்து செல்கிறேன்.
நான் இந்த கட்சியில் இருக்கும் காலத்தில் கட்சி வளர வேண்டும் என்ற உணர்வில் வேலை செய்வதோடு இல்லாமல், எந்நேரமும் ஒரு பதட்டத்திலும், சந்தேகத்திலும், நெஞ்சில் ஒரு இருக்கத்துடன் வேலை செய்ய முற்பட்டது.
அந்தப் பதட்டமும், சந்தேக எண்ணமும், கட்சி ஊசல் பயத்திலும் இருந்து இந்த கட்சியில் விலகினால், கட்சித் தொண்டர்கள் இன்னும் வீரியத்தோடு வேலை செய்ய வருங்காலங்களில் ஏதுவாக இருக்கும். விடைபெற்று செல்லும் கட்சியை குறை கூற விரும்பவில்லை. கட்சியின் கடைக்கோடி தொண்டனின் முன்னேற்றத்திற்காக மட்டும் இந்த பதிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision