திருச்சியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 663 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் மார்ச் 27ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியது.
மெகா வேலைவாய்ப்பு முகாம் மூலம் தென்னிந்தியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 663 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 3000 விண்ணப்பதாரர்களின் பங்கேற்புடன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் NSS மாணவர்களின் ஆதரவுடன் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு திறன் தேர்வு, குழு விவாதம் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் போன்ற பல்வேறு தேர்வு நடைமுறைகளை கடந்து செல்ல வேண்டும். 218 விண்ணப்பதாரர்கள் அடுத்த நிலை ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு அந்தந்த நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 663 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்திலேயே பணியாணை கடிதங்களை வழங்கியது. மாணவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் ஒரு பொன்னான வாய்ப்பாக இருந்தது.
முன்னதாக நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் திருச்சிராப்பள்ளியின் திட்ட இயக்குநர் டி.ரமேஷ்குமார், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் டாக்டர் இஸ்மாயில் முகமது மற்றும் டாக்டர். என்.பிரசன்னா, ஒருங்கிணைப்பாளர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவு, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO