திருச்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ - புகை மூட்டம், மூச்சு திணறல்
திருச்சி மாநகராட்சி 36வது வார்டு அரியமங்கலத்தில் 47,70 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. திருச்சி நகராட்சியாக இருந்த காலத்திலிருந்து குப்பைகள் இங்கு நான் கொட்டப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஆன பிறகு மாநகர் முழுவதும் தினமும் 450 டன்னுக்கு மேல் சேகரமாகும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் திடக்கழிவுகள் இங்கு சேகரிக்கப்பட்டு வருவதால், இங்கு சராசரியாக 564 மீட்டர் உயரத்துக்கு 7.59 லட்சம் கன மீட்டர் அளவுக்கு சுமார் 5 லட்சம் டன் திடக்கழிவுகள் சேகரமானது. இதனால், இப்பகுதியில் காற்று, நிலத்தடி நீர் மாசுபட்டதோடு, மக்களும் காலராப்பிரச்னை, தோல் நோய் உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் இக்குப்பை கிடங்கை அகற்றக்கோரி மக்களும், சுற்றுச்குழல் ஆர்வலர்களும் போராடி வந்தனர். மாநகர மக்களின், அரை நூற்றாண்டு கால பிரச்லைக்கு தீர்வு காணும் வகையில் ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ், குப்பை கிடங்கில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை விஞ்ஞான முறையில் அகற்றி நிரந்தர தீர்வு காணும் வகையில், ரூ.40 கோடியில் பயோ மைனிங்' திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதிட்டத்தில் 2000 ஆண்டு ஜனவரியில் குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணி தொடங்கியது.
ஈரோட்டைச் சேர்ந்த “இங்மாகுளோபல் என்யிரோன்மென்ட் சொலியூசன் நிறுவனம் மேற்கொண்ட இப்பணியில் பெரிய இயந்திரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலார்களைக் கொண்டு, குப்பைகள் பெரிய கல், மரம், கண்ணாடி என தனித்தனியாக பிரித்து அரைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் மாலை திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மலமலவென குப்பை கிடங்கு முழுவதும் பரவி வருகிறது. மேலும் கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். மூன்று வருடங்களாக அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ பற்றாமல் இருந்து நிலையில், தற்போது மீண்டும் தீ பற்றி எரிவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision