திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை - ஆட்சியர் தகவல்

திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை - ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரசு தொழிற் பயிற்சி நிலையம், மணிகண்டத்தில் பொருத்துநர், மின்சார பணியாளர், கம்மியர் மோட்டார் வண்டி ஆகிய பிரிவுகள் உள்ளது. இவற்றிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்பியாள், மற்றும் பற்றவைப்பவர் பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை பயிற்சியில் சேரலாம்.

மேலும் இந்நிலையத்தில் இவ்வாண்டு புதிதாக துவங்கப்படவுள்ள இன்டஸ்ட்ரீஸ் 4.0, தொழில் நுட்ப மைய பிரிவுகளுக்கு SCVT முறையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேசன் (Manufacturing Process Control & Automation) பிரிவு மற்றும் இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன் Industrial Robotics & Digital Manufacturing பிரிவில் ஒரு வருட பயிற்சியும், அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னிசியன் (Advanced CNC Machining Technician) பிரிவில் இரண்டு ஆண்டுகால பிரிவுகள் உள்ளது.

இப்பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் பயிற்சி கட்டணம் கிடையாது, பயிற்சியின் போது மாதம் தோறும் ரூ.750/- உதவித்தொகை வழங்கப்படும், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மூவாலூர் இராமாமிர்தம் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ. 1000/- மாதாந்திர கூடுதல் உதவித் தொகை வழங்கப்படும் விலையில்லா மடிக்கனிணி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், பாடபுத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். நிலைய பயிற்சியாளர்களுக்கு இலவச விடுதி வசதி உண்டு.

(13.7.2023) அன்று முதல் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மணிகண்டத்தில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு தொழிற் பயிற்சி நிலையம், மணிகண்டத்திற்கு மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், முன்னுரிமைச் சான்று, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவை ஆவணங்களுடன் பயிற்சியில் நேரிடையாக சேர அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை தொடர்பாக முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், மணிகண்டம், அவர்களை நேரிலோ அல்லது (9499055723), (8903611348) என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision