திருச்சியில் பள்ளி மாணவிகள் கடத்தல்? - எச்சரிக்கை செய்த மாவட்ட எஸ்.பி
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகள் நேற்று முன்தினம் (04.11.2024) சுமார் மாலை 05:00 மணியளவில் பள்ளிக்கு அருகில் உள்ள புத்த கடைக்கு புத்தகம் வாங்க சென்றதாகவும், அங்கு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தங்களை ஆம்னி காரில் இழுத்து சென்று ஏற்றியதாகவும்,
அந்த வாகனத்தில் மேலும் 3 சிறுமிகள் மயக்க நிலையில் இருந்ததாகவும், அந்த வாகனம் சிறுகாம்பூர் கடைவீதிக்கு அருகில் வரும் பொழுது கடத்தியவர்கள் குடிப்பதற்காக வாகனத்தினை நிறுத்தபோது, தாங்கள் இருவரும் தப்பி அப்பகுதியில் பள்ளி சீருடையில் நின்றபோது பொதுமக்கள் வாத்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உடனடியாக முசிறி மற்றும் ஜீயபுரம் அனைத்து மகளீர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டும், மேலும் அம்மாணவிகளையும் விசாரணை செய்ததில், தங்கள் இருவரையும் தங்கள் பெற்றோர்கள் படிக்க சொல்லி திட்டியதாகவும்,
இதனால் தாங்கள் இருவரும் பள்ளி முடித்து வீடு திரும்பாமல் எங்கேயாவது சென்றுவிடலாம் என துறையூரிலிருந்து பள்ளி சீருடையில் பேருந்தில் ஏறி சிறுகாம்பூர் (வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட) பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, மேற்படி விசாரணையில், பள்ளி மாணவிகளை யாரும் கடத்தவில்லை எனவும், தானாகவே பள்ளி சீருடையில் பேருந்தில் சிறுகாம்பூர் பகுதிக்கு சென்றதாக தெரியவருகிறது.
உடனடியாக, மேற்கண்ட மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து தகுந்த அறிவுரை வழங்கி எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் என்பதால், அவர்கள் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் கடுமையாக கண்டித்து அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
எனவே, இதுபோன்று பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்களித்தும் மற்றும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision