அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரித்த நீதிபதிகள் மதுரைக்கு மாற்றம் !!
சென்னையில் உள்ள ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையை சேர்த்து மொத்தம் 75 நீதிபதி இடங்கள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இலாகா ஒதுக்கப்படும்.
இதை தலைமை நீதிபதி ஒதுக்குவார். அதன்படி, ஐகோர்ட் நீதிபதிகள் மதுரை கிளைக்கும். மதுரை கிளையில் இருக்கும் நீதிபதிகள் ஐகோர்ட்டுக்கும் மாறுவார்கள். அதன்படி, ஐகோர்ட் நீதிபதிகள் மதுரை கிளைக்கும், மதுரை கிளையில் இருக்கும் நீதிபதிகள் ஐகோர்ட்டுக்கும் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறை இதையடுத்து அக்டோபர் 3ம்தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரையிலான 3 மாதங்களுக்கு இரு கோர்ட்டுகளிலும் பணியாற்றக்கூடிய நீதிபதிகளின் புதிய இலாகா ஒதுக்கீட்டை தலைமை நீதிபதி கங்கபுர்வாலா நேற்று அறிவித்தார்.
இதில், அமைச்சர்கள் பொன்முடி, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி ஆகியோர் வழக்கை தாமாக முன்வந்து எட்டுத்து விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் ஒருவர்.
இந்த மாற்றம் குறித்து மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டபோது, "இது வழக்கமான ஒன்று தான். இது திடீரென்று நடக்கவில்லை. வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவது இப்போது நடந்துள்ளது" என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision