இன்றே கடைசி நாள் அண்ணா இன்றே கடைசி

இன்றே கடைசி நாள் அண்ணா இன்றே கடைசி

இந்திய நாட்டில் புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுகின்றன என்று ரிசர்வ் வங்கி மே மாதம் 19ம் தேதி அறிவித்தது. 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை, வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2,000 நோட்டுக்களை மக்கள் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்தும், வேறு நோட்டுக்களாக மாற்றியும் வந்தனர். மே மாதம் 19ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் மொத்தம் ரூபாய் 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. ஆகஸ்ட் 31ம் தேதி வரை 3.32 லட்சம் கோடி 2000 ரூபாய் மதிப்பிலான 93 சதவிகித நோட்டுக்கள் அரசு கஜானாவிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

அப்போது, நாடு முழுவதும் ரூபாய் 24 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி வழங்கிய அவகாசம் இன்று 30ம்தேதியோடு நிறைவடைகிறது. எனவே, 2,000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கிக்கு சென்று, வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது வங்கியில் கொடுத்து வேறு நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். சனி, ஞாயிறு, திங்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை கவனத்தில் கொள்க, மேலும் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டாலும், ரூபாய் 2,000 நோட்டு தொடர்ந்து செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால், பணப்பரிமாற்றங்களில் ரூ.2,000 நோட்டு ஏற்றுக் கொள்ளப்படாது. செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னரும், ரிசர்வ் வங்கியில் ரூபாய் 2,000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். எனினும், அறிவிக்கப்பட்ட அவகாசத்துக்குள் ஏன் நோட்டுக்களை மாற்றவில்லை என நோட்டு வைத்திருப்பவர்கள் கட்டாயமாக விளக்கம் அளிக்க வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision