திருச்சியில் புதிய இரண்டு மாணவ, மாணவிகள் விடுதி - அமைச்சர் பேட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள விடுதிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி இன்று (30.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்..... தொடர்ந்து ஆதிதிராவிடர் பள்ளிகள், விடுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். தற்பொழுது தமிழக முழுவதும் நான்கு இடங்களில் விடுதிகள் தேவைப்படுகிறது. இந்த நிதியாண்டில் அறிவித்தபடி நான்கு மாவட்டங்களில் 100 கோடி மதிப்பிலான விடுதிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, மதுரை, நீலகிரி, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதிகள் கட்டப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திருச்சியில் பஞ்சபூரில் 350 மாணவர்கள் தங்கக்கூடிய இரண்டு தளம் கட்டிடம் 19 கோடி மதிப்பீட்டில் மதிப்பீட்டிலும், அதேபோல் ராஜா காலனியில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி 15 கோடி மதிப்பீட்டில் 250 மேற்பட்ட மாணவிகள் தங்கக்கூடிய விடுதியும் விரைவில் கட்டப்படும்.
11 மாதங்களில் இந்த இரண்டு விடுதிகளும் கட்டி முடிக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும். மாணவர்களுக்கு கொடுக்கும் உணவு தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி துறையில் சிறிது விலை உயர்த்த பேசி வருகிறோம் என்றார். வாச்சாத்தி விவகாரத்தில் தீர்ப்பு காலதாமதமாக வந்துள்ளது. இருந்தாலும் நியாயம் கிடைத்துள்ளது வரவேற்க கூடிய தீர்ப்பு என அமைச்சர் பதிலளித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision