திருச்சிராப்பள்ளியில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா, துணை ஆணையர் திரு.க.பாலு, மண்டத் தலைவர் திருமதி. துர்காதேவி , நகர் நல அலுவலர் திரு. விஜய் சந்திரன், செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision