தூய்மை பணியாளர்களுக்கு ஊக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சியில் தூய்மை பணிக்கான மின்கல வாகனங்கள் துவக்க விழா மற்றும் தூய்மை பணியாளருக்கு ஊக்கப் பரிசு தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமை வகித்தார். தொட்டியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பால. ந. திருஞானம் தொட்டியம் திமுக நகர செயலாளர் எம் ஏ ஆர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தார். தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந. தியாகராஜன் பங்கேற்று திடக்கழிவு மேலாண்மை பணிக்கு (2021-2022) ஆம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டடு திட்டத்தின் கீழ் ரூபாய் 7.61 லட்சம் மதிப்பில் ஐந்து மின்கல வாகனம் தமிழக அரசால் தொட்டியம் பேரூராட்சிக்கு வழங்கியதை பேரூராட்சியில் தூய்மை பணி பயன்பாட்டிற்காக மின்கல வாகனங்களையும்,
பொது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிக்கு நவீன இயந்திரத்தையும் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரூராட்சியில் பணிபுரியும் 33 தூய்மை பணியாளர்களுக்கு ஊக்க பரிசு தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வுகளில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர் முடிவில் இளநிலை உதவியாளர் கண்ணன் நன்றி கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision