செல்போன் டார்ச் லைட் மூலம் தினமும் சமைக்கும் பணியாளர்

செல்போன் டார்ச் லைட் மூலம் தினமும் சமைக்கும் பணியாளர்

திருச்சியை அடுத்த மாத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, 35 குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால், பாடம் நடத்த வேண்டிய ஆசிரியை வருவதில்லை. கடந்த, 1985ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம், ஆங்காங்கே சுவர்கள் இடிந்தும், சிதைந்தும் காணப்படுகிறது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள, இந்த கட்டிடத்தில் மின் வசதி, குடிநீர் வசதி கிடையாது. இங்கு, சத்துணவு பணியாளராக பணியாற்றுபவர், தனது மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தின் மூலமே சமைத்து, குழந்தைகளுக்கு உணவு வழங்குகிறார். மேலும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால், குழந்தைகள் மலஜலம் கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளியோடு சேர்த்து கூடுதல் பிரச்சினை ஒன்றும் குழந்தைகளை வாட்டுகிறது. அதாவது, பள்ளி அருகில் சுகாதார மையம் என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் கழிவறைகள் உள்ளன. இவைகள் முழுமையாக பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. அங்கு அவசரத்துக்கு வருபவர்கள், பாழடைந்த கட்டிடத்திற்குள் செல்ல அச்சப்பட்டு, அங்கன்வாடி பள்ளி முன்பே மலஜலம் கழித்து விடுகின்றனர்.

இதனால் இங்கு பயில்கின்ற குழந்தைகள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக வேண்டிய அபாய நிலை இருக்கிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் இந்த அங்கன்வாடி கட்டிடம், சுகாதார மையத்தை இடித்து தள்ள வேண்டும். சுகாதார மையம் இல்லாத புதிய கட்டிடத்தில் குழந்தைகளை படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று பெற்றோரும், இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை PDO ஜோனல் அதிகாரிகள் மலத்தை சுத்தம் செய்ய பணியாளர்களை வேலை சொல்லுவதால் வேறு வேலை கொடுக்குமாறு வாக்குவாததில் ஈடுபடுகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision