கே. ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் மாணவர்களின் எக்ஸ்னோரா அமைப்பு மற்றும் தமிழக வனத்துறை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கூத்தூர் ஊராட்சி பளூர் கிராமத்தில் மரம் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கூத்தூர் பளூர் சாலை ஓரங்களில் மாணவர்களின் உதவியோடும் வனத் துறையின் உதவியுடன் நடப்பட்டன.மேலும் அறிவியல் வளர்ச்சி எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது அதை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாவரங்கள், பறவைகள், விலங்குகள், நீர் நிலை ஆகியவற்றை நாம் பாதுகாத்து கொண்டால் இயற்கை நம்மையும் நம் வருங்கால சந்ததியும் இன்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இவ்விழாவில் கூத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம் மணிகண்டன் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். வேதியியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் தலைவர் மோ.தாமரை செல்வி வழிகாட்டுதல்படி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கல்லூரி முதல்வர் மற்றும் முனைவர் தேவராசு சீனிவாசன் மாணவர்களை பாராட்டினார்.
மேலும் வருங்காலத்தில் சுற்றுச்சூழல் பற்றிய முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மிகுதியாக பாராட்டினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO