திருச்சி மாநகரில் இரண்டு கடைகளுக்கு சீல்

திருச்சி மாநகரில் இரண்டு கடைகளுக்கு சீல்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள சக்தி டீ ஸ்டால் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அரப்ஜான் பெட்டிக்கடை ஆகிய இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் செந்தில்குமார் அவசர தடை உத்தரவின் படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவால் இரண்டு கடைகளுக்கும் செய்யப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள சக்தி டீ ஸ்டால் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அரப்ஜான் பெட்டிக் கடை ஆகிய இரண்டு கடைகளில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. காந்தி மார்க்கெட் கடையில் 28.04.2022 அன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் 08.03.2021 அன்றும் முதல் ஆய்வில் அவர்களது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் காந்தி மார்க்கெட் கடை மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள இரண்டு கடைகளிலும் 24.05.2022 அன்று நடத்திய ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றப்பட்டு இரண்டு கதைகளுக்கும் மீண்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய தினம் 24.05.2022 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் 26.05.2022-ல் அவசர தடை உத்தரவு வழங்கியதில் அடிப்படையில் அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் செய்யப்பட்டது.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO