திராவிட மாடல் என்பது தீண்டாமை - திருச்சியில் சீமான் பேட்டி
2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தபட்ட காவல்துறை தரப்பில் பொது சொத்தை சேதப்படுத்தியதற்கான தொடுக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகிறார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்... சங்கரன்கோவில் பாஞ்சாங்குளம் சம்பவம் குறித்து கேட்டதற்கு திராவிட மாடல் என்பது தீண்டாமை. திராவிட மாடல் ஆட்சியில் இதுதான் நடக்கும்.
தேசிய கல்வி கொள்கை வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து மொழிகளும் அழிந்துவிடும். புதிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளின் மரண சாசனம் என அறிஞர்களே குறிப்பிட்டு விட்டனர். மூன்றாம் வகுப்பில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நீட் தேர்வு என அனைத்திற்கும் தேர்வை எழுதுகின்றனர். ஆனால் நாட்டை ஆளும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் எந்த தேர்வும் எழுதுவதில்லை. நீட் தேர்வுக்கு முன் தேர்வு எழுதி மருத்துவர்கள் தகுதியானவர்கள் தானே. நீட் தேர்வில் வட மாநிலங்களில் முறைகேடு செய்து எழுதுவதாக குற்றம் சாட்டினர்.
மனுதர்மத்தில் எழுதி இருந்ததை தான் ஆ.ராசா குறிப்பிட்டார். அதில் இந்துக்களை இழிவாக பேசிய உள்ளதை குறிப்பிட்டார். மனுதருமத்தில் இருப்பதை எடுத்துரைத்தார் என்றார். கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நாம் தமிழர் கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்க தயாராக உள்ளோம்.
உலகிலேயே மிக தொன்மையானது பழமையானது தமிழ் மொழி என பிரதமரே தாய்மொழி தமிழை குறிப்பிட்டுள்ளார். அப்ப தாய்மொழி தமிழை அனைவரும் கற்க வேண்டும். அப்படி இருக்கும் போது எதற்கு ஹிந்தி படிக்க வேண்டும் என கூறினார். இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 18ஆம் தேதி மீண்டும் சீமான் ஆஜராக வேண்டும் என நீதிபதி பாபு உத்தரவிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO