மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை

 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் திருச்சி மண்டலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கலை கல்லூரி படிக்கும் மாணல/ மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை இன்று முதல் வழங்கப்படுகின்றன என கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் R.மோசுன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்திற்கு இலவச பேருந்து பயண அட்டை வேண்டி 2,14,000 விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வரப்பட்ட விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் ஸ்மார்ட் கார்டு முறையில் இலவச பேருந்து பயணஅட்டை தயார் செய்பப்பட்டு இன்று முதல் வழங்கப்படுகின்றன.

அதன்படி இதுவரைதிருச்சிராப்பள்ளி மண்டலத்தில் திருச்சி மாவட்டம். அரியலூர் மாவட்டம், பெரம்பலூர்மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச பயணஅட்டை(ஸ்மார்ட் கார்டு) அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று முதல்(01.09.2023) வழங்கப்படுகின்றன.

அதன்படி இன்று (01.09.2023) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2478 மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் R.மோகன்  தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision