ரூ. 55 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகம் கொரானா காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 55 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும், தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆறு மருத்துவ வெண்டிலேட்டர்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சென்னை கேகே நகரில் உள்ளESIC மருத்துவமனைக்கும் வழங்கியுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெண்டிலேட்டர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி டீன் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
மற்ற வெண்டிலேட்டர்கள் ESIC மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர்களோடு ஆக்சிஜன் ஓட்ட மீட்டர்களும் , பல்ஸ் ஆக்சி மீட்டர்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா காலகட்டத்தில் குறிப்பாக பொதுமுடக்க காலகட்டத்தில் இந்த உபகரணங்கள் வாங்குவதே மிக கடினமான காரியமாக இருந்தது என துணைவேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தங்களை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd