தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்றால் கடைக்கு சீல் - மாவட்ட நியமன அலுவலர் தகவல்
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து வந்த ரகசிய தகவலையடுத்து திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரங்கநாதன் மற்றும் அன்புச்செல்வன் கொண்ட குழுவால் திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நொச்சியம் பகுதியில் இரண்டு கடைகளும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் துறையூர் மொத்த விற்பனையாளர் கடையின் கழிவறையில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் தொடுப்பதற்காக மூன்று உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் நொச்சியம் பகுதிகளில் இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் 1 கிலோ 200 கிராம் கண்டறியப்பட்டு கடைக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்...
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து ஒரு கடையின் மீது இரண்டு முறை அபராத தொகையை அல்லது உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்து விட்டாலே மீண்டும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்து இதேபோன்று தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை நிர்ணய சட்டம் 2006 இன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்தக் கடைக்கு சீல் செய்யப்பட்டு மூடப்படும் என கூறினார்.
இதேபோன்று பொது மக்களுக்கும் உணவு சம்பந்தமான பல கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.
புகார் எண் : 9585959595 / 9944959595
மாநில புகார் எண் : 9444042322
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn