சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் - 2021 முன்னோடி பெண்களுக்கு விருது
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மகளிரியல் துறை, சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் - 2021 நிகழ்ச்சியை 15.09.2021 நேற்று நடத்தியது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.நா சர்வதேச மகளிர் தின மையக்கரு “தலைமைத்துவத்தில் பெண்கள் கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் பாலினச்சமத்துவத்தை நோக்கி”. இந்த தலைப்பை மையமாக கொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரி மாணவ-
மாணவிகளுக்கு போட்டிகள் மார்ச் மாதம் நடத்தப்பட்டது.
முன்னோடி பெண்களுக்கு விருது வழங்குவது, பாலின சமத்துவ கலைவிழாவில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவது மற்றும் மகளிர தினம் கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் ஐ.நா. சர்வதேச மகளிர் தினதிற்கு தேர்வு செய்யும் மையக்கருத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பேரா.ந.முருகேஷ்வரி, மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைகக்கழகம், திருச்சிராப்பள்ளி வரவேற்புரையாற்றினார். பேரா.ந. மணிமேகலை, தலைவர், சமூக அறிவியல் புலம், இயக்குநர் மற்றும் தலைவர், மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைகக்கழகம், திருச்சிராப்பள்ளி மகளிர்தின மையக்கருத்துரைப பற்றி பேசினார்.
பெருந்தொற்று காலத்தில் மகளிர் நிர்வாகம் மற்றும் ஆட்சி புரியும் நாடுகளில் கோவிட் பெருந்தொற்று
தாக்கம் கட்டுபாட்டிற்குள் இருந்தது என்ற தகவலை பகிர்ந்து கொண்டார்.
பேரா.ம.செல்வம், மாண்பமை துணைவேந்தர்,பாரதிதாசன் பல்கலைகக்கழகம், திருச்சிராப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னோடி பெண்களுக்கு விருது மற்றும்
சான்றிதழ் வழங்கி கௌரவித்து, தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில் மகளிரியல் துறை செயல்பாடுகள் குறித்து பாராட்டினார்.
பேரா.க.கோபிநாத், பதிவாளர் (பொ), பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி பாலினசமத்துவ கலை விழா போட்டிகளான கட்டுரை, கவிதை, நடனம், நாடகம், ஊமை நாடகம் போன்றவற்றில் வெற்றி பெற்ற பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு
பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். சிறப்பு விருந்தினராக அ.ஜெயபாரதி (அ) மனுஷி, பெண்ணிய எழுத்தாளர், சாகித்திய அகாடமி விருதாளர் கலந்து கொண்டு “கதைகள் காட்டும் பெண் உலகம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தனது உரையில் கதைகள் வழியான பெண்களின்
ஒழுக்கம், கட்டுப்பாடுகள் எவ்வாறு கற்றுத்தரப்படுகிறது என்பதை அழகாக எடுத்துக்கூறினார்.
பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ இயலாமல், அவர்களின் ஆசைகளை சொல்ல வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் மாரட்டிய கதையில் கரடியின் காதல் என்ற சிறு கதை மூலமும், பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்டுவதை “பெண்ணுக்கும் நாய்கும் திருமணம்” என்ற கதை மூலமும் எடுத்துரைத்தார். முனைவர். எம். லல்லி, ஆட்சிக்குழு உறுப்பினர், பாரதிதாசான் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி வாழ்த்துரை வழங்கினார். விருதாளர்களின் சார்பாக பேரா. அருணா தினகரன். முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்த்துறை, புனித சிலுவை கல்லூரி, திருச்சிராப்பள்ளி ஏற்புரை வழங்கினார்.
அவர் தனது உரையில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுமைகளை கண்டறிந்து அதை சரி செய்ய பள்ளிகளில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தி கூறினார். முனைவர்.சா.சுபா, இணைப்பேராசிரியர், மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு இறுதியில் நன்றி நல்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn