திருச்சி திமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்- நான் என்ன கிள்ளு கீரையா எனக்கேள்வி

திருச்சி திமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்- நான் என்ன கிள்ளு கீரையா எனக்கேள்வி

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற  கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் வைத்தி நாதன் மற்றும் மண்டலத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் பகுதிக்கான  தேவையை முன்வைத்தனர். அப்போது டெண்டர் முறையாக விடப்படவில்லை எனக் கூறி திமுக மாமன்ற உறுப்பினர் மேயரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மாமன்ற சாதாரண கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் டெண்டர் விடப்பட்டதாகவும், முறையாக நோட்டிஸ் விடாமல் டெண்டர் விடப்பட்டதாகவும், 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துசெல்வம் மாநகராட்சி மேயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பிற மாமன்ற உறுப்பினர்களும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. டெண்டர் அறிவிப்பு தனக்கு தெரியவில்லை என 57 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை ஒருமையில் பேசினார்.

தொடர்ந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அனைத்து வார்டு டெண்டர்கள் அறிவிப்பையும் அனைத்து கவுன்சிலருக்கும் தெரிவிக்க முடியாது என்ற தகவலையும் மேயர் குறிப்பிட்டார். தொடர்ந்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது திமுக 60 வார்டு கவுன்சிலர் விஜய் இவருடன் சேர்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மேயரும் முத்து செல்வத்தை ஒருமையில் பேசினார். முத்துச்செல்வம் நான் ஒன்னும் கிள்ளு கீரை அல்ல மாமன்ற கூட்டத்தில் அனைத்தையும் ஒப்புதல் அளித்து செல்வதற்கு என மீண்டும் குரலை உயர்த்தி பேசினார். திமுக கவுன்சிலர்களே திமுக மேயரை ஒரு மேல் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn