அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருச்சி புத்தூர் அருகே மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று(31.01.2023) அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சிறு குழந்தைகள் தங்களது அறிவியல் படைப்புகளை மழலை குரலில் வெளிப்படுத்தினர். முன்னதாக இந்த அறிவியல் கண்காட்சியை பத்மஸ்ரீ சுப்புராம் துவக்கி வைத்தார். அறிவியல் கண்காட்சி பகுதியில் நுழைந்தவுடன் விவசாயி வேடத்தில் யுகேஜி படிக்கும் குழந்தை அமுதன் விவசாயத்தின் முக்கியத்துவத்தை தனக்கே உரிய மழலை குரலில் பேசி அனைவரையும் கவர்ந்தார். பாரம்பரிய உணவு வகைகள், நெகிலியினால் ஏற்படும் சுகாதார சீர்கேடு ,மரங்களை வளர்த்து சுற்றுபுறத்தை பசுமையானதாக வைத்துக் கொள்ளும் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. மேலும் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் உருவத்தை கியூப் மூலம் இந்த குழந்தைகள் செய்து வைத்து அனைவரையும் அசத்தினர். கண்காட்சியில் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை சிறு குழந்தைகளும் விளக்கி பேசினர்.

மிக முக்கியமாக இந்த அறிவியல் கண்காட்சி குழந்தை பருவத்திலிருந்து  தாங்கள் என்ன உணவு வகைகள் உட்கொள்ள வேண்டும் மற்றும் விவசாயத்தை காப்பது,காற்று மாசுபடாமல் தவிப்பது குறித்த விளக்கங்களும் நேரடியாக அவர்களுக்கு கண்காட்சி மூலம் அறிவுரையாக வழங்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn