சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்

சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருத்தவத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது இக்கோயில். ஏழு முனிவருக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும் இத்தலத்திற்கு திருத்தவத்துறை என்றும் அழைக்கப்படுகிறது.

           இக்கோயிலின் பங்குனித் திருவிழாவின் ஒன்பதாம் நாள் சுவாமி எழுந்தருள கலை நயமிக்க 75 அடி உயரம் உள்ள மிகப் பழமையான மரத்தாலான திருத்தேர் 1918 ம் ஆண்டு செய்யப்பட்டது . இத் தேரின் திருவீதியுலா கடந்த 1936 ம் ஆண்டுக்குப் பின் 75 ஆண்டுகளுக்கு பிறகு இத் தேர் புதுபிக்கப்பட்டு 2011 ம் ஆண்டு முதல் பங்குனி பெருவிழாவின் ஒன்பதாம் நாளில் திருத் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

              நிகழாண்டில் தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் விழா கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மார்ச் - 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 ம் தேதி வரை தினசரி காலை 7 மணிக்கு அம்பாள் பல்லாக்கில் புறப்படும் இரவு 7 மணிக்கு அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஏப்ரல் 3 ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட விழாவில் லால்குடி ,ஆங்கரை மணக்கால்,நன்னிமங்கலம் ,மும்முடி சோழமங்கலம், சாத்தமங்கலம், திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 # திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய....

  https://t.me/trichyvisionn