ரூ.1,50,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - 4 நபர்கள் கைது.

ரூ.1,50,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் -  4 நபர்கள் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று (13.03.2024) கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்குபட்டி சந்திப்பில் வாகன சோதனை செய்தபோது இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தனது இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக வைத்திருந்த புத்தூரை சேர்ந்த ஜெயராமன் (35), மற்றும் கல்லுகுழியை சேர்ந்த சாதிக்பாட்சா (43), ஆகியோரிடம் ஹான்ஸ் - 75 கிலோ, கூல்லிப் - 2.50 கிலோ, விமல் - 23 கிலோ, RMD பான்மசாலா - 3 கிலோ மற்றும் M Gold-3.75 கிலோ என சுமார் ரூ.95,00,000/- மதிப்புள்ள, 108 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

உடனடியாக மேற்படி குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், குட்கா விற்பனை செய்த பணம் ரூ.82,000/,- 108 கிலோ குட்கா பொருட்கள் கடத்த பயன்படுத்திய 2 இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி இருவரையும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இன்று(14.03.2024)-ந் தேதி, தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலின்பேரில் இதயாத் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தும் மற்றும் அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை சோதனை செய்தபோது, அதில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.55,000/- மதிப்புள்ள, 70 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனடியாக மேற்படி குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி குட்கா பொருட்களை கடத்தி வந்த ஆழ்வார்தோப்பை சேர்ந்த ஹபிபுதீன் (26), என்வரையும், மளிகை கடையில் வைத்து விற்பனை செய்ததாக காஜா மைதீன் (24), ஆகியோரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision