தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை போன்று மத சண்டைகளோ, ஜாதி சண்டைகளோ, பெரிய அளவில் இல்லாமல் இருந்து வந்தது இந்த நிலைமையை மாற்றி மத சண்டைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் தூண்டுதலின் பேரில் இந்து முன்னணி அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிஜேபியால் காலூன்ற முடியாத காரணத்தினால் இப்படிப்பட்ட இழிவான செயல்களை செய்து வருகிறார்கள். மதுரையில் இருக்கின்ற திருப்பரங்குன்றம் மலையின் மீது அசைவ உணவு உண்டார்கள் என்ற வீடியோவை தமிழகம் முழுவதும் பரப்பியும் உண்மைக்கு புறம்பாக அந்த மலையை முருகன் கோயிலுக்கு சொந்தமானது என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கி மத வெறியை தூண்டி வருகிறார்கள்.

 தமிழகத்தை கலவர பூமி ஆக மாற்ற வேண்டும் என்பதே இந்து முன்னணியரின் நோக்கமாக தெரிகிறது.எனவே தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து ஜனநாயக இயக்கங்கள் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம் திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision