இதுவரை இல்லாத புதிய சாதனை ! 20 லட்சம் கார்கள் விற்பனை !!
நடப்பு முதல் அரையாண்டில், அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் / பயணிகள் வாகனம் உள்நாட்டு ச தையில் விற்பனையாகியுள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத் தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் இதுபோன்ற வாகனங்களின் விற்பனையானது,ஒரு நிதியாண்டின் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் பாசஞ்சர் வாகனங்கள் எனப்படும் கார் உட்பட வாகனங்க ளின் விற்பனை 10 லட்சத்து 74 ஆயிரத்து 189 ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற் பனை 10 லட்சத்து 26 ஆயிரத்து 309 யூனிட்களாக இருந்தது.
முதல் அரையாண்டில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. இந்திய வாகன விற்பனைச் சந்தையில் இதுதான் முதல்முறை (ஏப்ரல் முதல் செப்டம்பர்). இந்தக் கால கட்டத்தில் விற்பனை 10 லட்சத்து 70 ஆயிரத்து 163 யூனிட்களாக உள்ளது. முந்தைய காலகட்டத்தில் விற்பனை 19 லட்சத்து 36 ஆயிரத்து 804 யூனிட்களாக இருந்தது.
*பைக் விற்பனை 45 லட்சத்து 73 ஆயிரத்து 9.31 யூனிட்களில் இருந்து 40 லட்சத்து 98 ஆயிரத்து 442 யூனிட்களாகியுள்ளது. வணிக ரீதியாக வாகனங்களின் விற்பனை 2 லட்சத்து 31 ஆயிரத்து 991 யூனிட்களாக உயர்ந்துள்ளது.
* ஆட்டோ உட்பட 3 சக்கரவாகன விற்பனை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 319 யூளிட்களில் இருந்துள்ளது. ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 215 யூனிட்களாக உயர்ந்துள்ளது.
* ஜூலை செப்டம்பர் காலாண்டில் மட்டும் கார் / பைக் / சரக்கு வாகனங்கள் / ஆட்டோக்கள் விற்பனையானது 60 லட்சத்து 52 ஆயிரந்து 739ல் இருந்து 61 லட்சத்து 16 ஆயிரத்து 91 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,- #திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்அறிய....
- https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
- #டெலிகிராம் மூலமும் அறிய....
- https://t.me/trichyvisionn
- https://www.threads.net/@trichy_vision
-