காதில் வழிந்த ரத்தம்... சீறாத சிறுத்தைகள் ! ஸ்தம்பிக்க போகும் தமிழகம் !!

காதில் வழிந்த ரத்தம்...  சீறாத சிறுத்தைகள் ! ஸ்தம்பிக்க போகும் தமிழகம் !!

திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்டதை கண்டித்து 25ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால், ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்யச்சென்ற திருச்சி மேற்கு துணை தாசில்தார் பிரேம்குமார், வங்கி அலுவலர்களை அந்நிறுவனத்தினர் தாக்கினர். 

இதனைக்கண்டித்து 19 மற்றும் 20ம் தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுமுறை நாளான நேற்றும் பணியை புறக்கணித்தனர். தொடர்ந்து, 25ம்தேதி முதல் மாநிலம் முழுவதும் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊர்திகளை பயன்படுத்தாமல் அலுவலகத்திலேயே விட்டுவிட்டு சொந்த வாகனத்தில் சென்றனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது...... துணை தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்காததால் வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் சார்பில் ஒட்டுமொத்த கூட்டமைப்பு சார்பில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முடிவுகள் ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் என்பவருக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் சார்பில் வழக்கு நடத்தப்படும். இச்சம்பவத்தை கண்டித்து வரும் 25ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் சார்பில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் எனத்தெரிவித்துள்ளர்.

கடந்தசில மாதங்களுக்கு முன் திருச்சி எம்.பி.வீட்டை தாக்கியது, நீதிமன்ற காவல்நிலையத்தில் புகுந்து பெண் காவலர் கைவிரலை உடைத்தது, இப்பொழுது தாசில்தார் தாக்கப்பட்டது என வரிசையாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதை காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. தாக்கப்பட்டவர் பட்டியலினத்தவர் எங்கே போனார்கள் கூட்டணிக் கட்சியினர் என ஏகப்பட்ட கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி விட்டது.

ஆட்சியரை முதலில் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன. பணிகள் பாதிக்கும், மாவட்ட நிர்வாகம் ஸ்தம்பிக்கும் முன் அரசு செவிசாய்க்க வேண்டும் என்கிறார்கள். இதனிடையே, இச்சம்பவத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision