திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ 28 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ 28 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 48 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 28 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த முகமது கலித்கான் (30) என்பவர் தனது உடலில் பசை வடிவில் தங்கத்தை மறைத்து கண்டிபிடித்தனர். 

அவரிடம் இருந்து ரூபாய் 48 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 28 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல். தங்கத்தை கடத்தி வந்த முகமது கலித்கானிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH