திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்டம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், கோச்செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.அதன்படி இன்றுகாலை பங்குனித்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல்நாளான இன்று கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் பெரிய கொடியானது ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜம்புகேசுவரர் மற்றும் அகிலாண்டேசுவரியும் விநாயகர், சுப்ரமணியசாமி மற்றும் சண்டிகேசுவரருடன் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இதில் திரளாக பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.
வருகிற மார்ச் 11ம்தேதிஎட்டுத்திக்கும் கொடியேற்றம் நடைபெறும், பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா ரதாரோஹனம் வருகிற மார்ச் 16ம்தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH